தேர்ந்தெடுக்கப்பட்ட 8 தமிழ்ப்பள்ளிக்கு இலவச பள்ளி புத்தகப் பைகள் மற்றும் திரட்டப்பட்ட புத்தகங்கள்!
மலேசியாவிலுள்ள தேர்தெடுக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிக்கு நூலகத்திற்கு கடந்த சனிக்கிழமை 13-ஆம் தேதி கிள்ளான் டெஸ்கோ பேரங்காடி கார் நிறுத்தும் வளாகத்தில் ராகாவின் ஏற்பாட்டில் புத்தகங்கள் திரட்டும் நிகழ்ச்சி செய்யப்பட்டிருந்தது.
காலை 10 தொடக்கம் மாலை 4 வரை நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி, அதனை இலவசமாக ராகா குழுவினர்களுக்கு வழங்கினார்கள்.
அதுமட்டுமின்றி, இவ்வாண்டு பள்ளிக்கு காலடி எடுத்து வைத்திருக்கும் வசதிக் குறைந்த 200 தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு அடிப்படைப் பொருட்களான புத்தகங்கள், எழுதுபொருட்களை உள்ளடக்கிய இலவச பள்ளி புத்தகப் பைகள் ராகா வானொலி நிலையம் வழங்கவுள்ளது.
ராகா தலைவர் சுப்ராமணியம் கூறுகையில், “எங்களால் முடிந்த வரை வசதிக் குறைந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இலவசமாக பள்ளி புத்தகப் பைகளை எடுத்து வழங்கியுள்ளோம். இந்நிகழ்ச்சி வெற்றி அடைய செய்த ராகா அறிவிப்பாளர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் எங்களுக்கு என்றும் ஆதரவாக இருக்கும் இரசிகர்களுக்கு இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வகையான முயற்சிகள் தொடர்ந்து கொண்டே போகும்”, என்று அவர் கூறினார்.
இதன் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பயனடைவார்கள் எனத் தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
அதை வேளையில், இந்த இலவச பள்ளி புத்தகப் பைகள் மற்றும் திரட்டப்பட்ட புத்தகங்கள் ஆர்.ஆர்.ஐ. சுங்கை பூலோ தமிழ்ப்பள்ளி, காஜாங் தமிழ்ப்பள்ளி, பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி, மூவார், ஜாலான் காலிடி தமிழ்ப்பள்ளி, ஜேன்ஜாரோம் தமிழ்ப்பள்ளி, ஸ்கார்ப்புரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி, கோலா கங்சார் குலா தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் செமினி தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கப்படும்.