ராகாவின் ஸ்டார் யார் 2.0 தேடல் ஆரம்பம்
கடந்த 2014-ஆம் ஆண்டில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட ராகாவின் ஸ்டார் யார் போட்டி மீண்டும் மலர்ந்துவிட்டது. புதிய வானொலி அறிவிப்பாளர் தேடும் நோக்கில் ராகாவின் ஸ்டார் யார் 2.0 அதன் தேடல் ஆரம்பமாகியுள்ளது.
ராகாவின் ஸ்டாராக விரும்புவார்கள் இன்ஸ்டாகிராம் வாயிலாக தங்களுடைய பற்றிய சுருக்கமான அறிமுகம் மற்றும் ஏன் அடுத்த ‘ராகாவின் ஸ்டார் யார்’ வெற்றி மகுடத்தை வெல்ல வேண்டும் எனும் 1 நிமிடத்திற்கு உள்ளடக்கிய காணொளி ஒன்றைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அக்காணொளியைப் பதிவேற்றம் செய்யும் பொழுது #RaagaStar2 எனும் சொல்லை ஹேஸ்டேக் செய்ய மறவாதீர்கள்.
மிகச் சிறந்த மற்றும் ஆக்கப்பூர்வமான காணொளிகள் தேர்தெடுக்கப்பட்டு ராகாவின் வானொலி நிலையத்திற்கு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
பிறகு அடுத்தச் சுற்றுக்குத் தேர்தெடுக்கப்படும் 4 போட்டியாளர்கள் 2 வாரங்களுக்கு கொடுக்கப்படும் சவால்களை மிகச் சிறப்பாக செய்து அதிக புள்ளிகள் பெறும் ஒருவர் மட்டுமே ராகாவின் ஸ்டார் யார் 2.0 வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள்.
இப்போட்டியின் வெற்றியாளராக மட்டுமில்லாமல் ராகாவில் அறிவிப்பாளராக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பும் வழங்கப்படவுள்ளது.
மேல் விவரங்களுக்கு raaga.my அகப்பக்கத்தை நாடுங்கள்.