பெரிது எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்ட்ரோவின் ‘சூப்பர்ஸ்டார்’ பாடல் திறன் போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்று சனிக்கிழமை 27-ஆம் தேதிஷா ஆலமில் மெலாவத்தி அரங்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சிலாங்கூர்பெஸ்டரி ஜெயாவைச் சேர்ந்த 21 வயது அன்பழகன் இப்போட்டியின் வெற்றியாளராகஅறிவிக்கப்பட்டார்.
சூப்பர் ஸ்டார் 2018 இறுதிச்சுற்றின் முதல் சுற்றில் போட்டியாளர்கள்தங்களுடைய விருப்பப் பாடலைத் தேர்ந்தெடுத்து பாடினார்கள். அவ்வகையில், முதல்போட்டியாளராக களமிறங்கிய பிரசாத் யுனிவர்ச்டி திரைப்படத்திலிருந்து ‘நெஞ்சே துள்ளிபோ’ பாடலை பாடிநடுவர்களின் பாராட்டுகளைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து இளையராஜா இசையில் காதல்ஓவியம் திரைப்படத்தில் இடம்பெற்ற சங்கீத ஜாதி முல்லை பாடலை பாடிய அன்பழகன்முழுமையான படைப்பை தரவில்லை என்றார் இந்தியாவின் குரல்பயிற்சி நிபுணர் ஆனந்த் வைத்தியநாதன். பிறகு,மூன்றாவது போட்டியாளராக களமிறங்கிய கயிலைநாதல் 1924-ஆம் ஆண்டில் வெளிவந்தசிவசங்கரி எனும் பாடலை பாடி‘வாடி என் தங்க சிலை’ மற்றும் இறுதிபோட்டியாளரான வினோட் குமார் ‘வந்தாள் மகாலக்ஷ்மியே’ பாடலை பாடிமுதல் சுற்றை முடித்து வைத்தார்.
அதன் பிறகு, முதல்சுற்றில் அதிக புள்ளிகள் பெற்ற கயிலைநாதர், வினோட் குமார்மற்றும் அன்பழகன் அடுத்த சுற்றுக்குத் தேர்வாகினர். எஞ்சி இருந்த பிரசாத் மற்றும்அமீர் அடுத்த சுற்றுக்கு செல்வார்களாக இல்லையா எனும் பரபரப்பு ரசிகர்கள் மத்தியில்காணப்பட்டது. இறுதியில் பிரசாட் தேர்வாகினார்.
இரண்டாம் சுற்றில் நேருக்கு நேர்சவாலில் கயிலைநாதர் பிரசாத் உடன் மோதி சூப்பர் ஸ்டார் போட்டியின் இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார். இவர்களை அடுத்து களமிறங்கிய வினோட் மற்றும்அன்பழகன் சிறப்பான படைப்பை வழங்கினார்கள். இருப்பினும், இப்போட்டியின்இறுதிச் சுற்றுக்கு அன்பழனை நடுவர்கள் தேர்தெடுத்தார்கள்.
வெற்றியாளரை நிர்ணிக்கும் இறுதிச்சுற்றில் பிரசாத் மற்றும் அன்பழகன் இவ்வாண்டின் சூப்பர் ஸ்டார் போட்டிக்காகதயாரிக்கப்பட்ட பாடலைப் பாட வேண்டும் எனும் சவால் வழங்கப்பட்டது. இருவரும்அசத்தலான படைப்பை வழங்கி வந்திருந்த ரசிகர்களின் கைத் தட்டல்களைப் பெற்றார்கள்.
போட்டியின் இறுதியில் 80.33புள்ளிகள் பெற்று அன்பழகன் இவ்வாண்டுக்கான சூப்பர் ஸ்டார் மகுடத்தைத் தட்டிச்சென்றார். இவர் ரிம 50,000 ரொக்கமும் சூப்பர் ஸ்டார்கோப்பையும் வென்றார். அதுமட்டுமின்றி, இவர் ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தில் நடத்தப்பட்ட‘Most Popular Viewers Choice Award’, அதிக வாக்குகள் பெற்றுரிம 10,000 ரொக்கமும் வென்றார். இரண்டாம் நிலை வெற்றியாளரான பிரசாத்ரிம 25,000 ரொக்கமும் மூன்றாம், நான்காம்மற்றும் ஐந்தாம் நிலை வெற்றியாளர்களான வினோட், கயிலைநாதர்மற்றும் அமீர் முறையே ரிம 15,000 ரொக்கமும் வழங்கப்பட்டது.
அதைவேளையில், இந்நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக சாதனையாளர்களைக்கெளவரப்படுத்தும் வகையில் இவ்வாண்டு ஊடகவியல் மற்றும் கலைத்துறையில்தங்களுக்குக்கேன ஒரு முத்திரைப் பதித்த சாதனையாளர்களை ஆஸ்ட்ரோ சிறப்பு செய்தது.அவ்வகையில், டத்தோ சோதிநாதன், பாலன் மோசே,பேன் நாதன், துரை ராஜ் மற்றும் அச்சப்பன். இவர்களுக்கு சூப்பர் ஸ்டார் சாதனையாளர் விருதும், 5,000 வெள்ளிக்கான மாதிரி காசோலையும் கோப்பையும்வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்கலந்து கொண்டார்.