சாதனை முத்துக்களுக்கு அங்கீகாரம் வழங்கி கெளரப்படுத்திய ‘ஆஸ்ட்ரோ உறுதுணை விருது’
கலை, கல்வி, சுகாதாரம் என சமுதாய சேவைகளில் அதிகமாக செயல்பட்டுவரும் ஆஸ்ட்ரோ உறுதுணை ஏற்பாட்டு குழு, நமது சமுதாயத்திற்கு நற்பணியாற்றிய நல்லுள்ளங்களையும், சமுதாய வளர்ச்சிக்கு பங்களித்த சாதனையாளர்களையும் சிறப்பு செய்யும் வகையில், ‘ஆஸ்ட்ரோ உறுதுணை விருது’ எனும் அங்கீகாரம் வழங்கி கெளரப்படுத்தியது.
இந்த விருதளிப்பு விழா, செப்டம்பர் 23-ஆம் தேதி ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் நடைபெறவுள்ள அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக இடம்பெற்றது.
கல்வி, சமூகம், புத்தாக்கம் என்று பல துறைகளில் சாதனைக்கொடி நாட்டி, சமூக மேம்பாட்டிற்கு நற்பணி சேவைகளை ஆற்றிவரும் சில பிரமுகர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு மரியாதை செய்தது ஆஸ்ட்ரோ உறுதுணை. அந்த வகையில்:
மலேசியக் காவல்துறையின் ஆணையரும் (கமிஷனர்) மற்றும் குற்றப்பிரிவு விசாரணையின் துணை இயக்குநரும் டத்தோ ஆ.தெய்வீகன். தன்னுடைய சவால் நிறைந்த பொறுப்புகளுடன் உயர் அதிகாரியாக மட்டுமல்லாமல் நம்முடைய சமுதாயத்திற்காகப் பெறும் பங்காற்றியுள்ளார். இளைஞர்களுக்குக் கல்வி, பகடி வதை மற்றும் சமூகப் பிரச்சனைகளைக் குறித்த விழிப்புணர்வுகளை அவ்வாப்போது வழங்கி வருகின்றார்.
டாக்டர் வெங்கடேஸ்வரா ராவ். ஒரு மருத்துவராக மட்டுமில்லாமல், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஏழை குடும்பங்களுக்கும் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை வழங்கு வருகின்றார். மனிதாபிமான நடவடிக்கை அடிப்படையில், போர் மற்றும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளை எதிர்வொரு எதிர்பார்ப்புமின்றி ஒரு சமூகச் சேவையாளராக பணியாற்றியுள்ளார்.
டாக்டர் ஏ. முரளி. தன்னுடைய உழைப்பால் வாழ்க்கையில் முன்னேறி மலேசியாவில் தமிழன் உதவு கரங்கள் இயக்கத்தை வழிநடத்தி மற்றவர்களுக்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாகவும் வழிகாட்டியாகவும் திகழ்கின்றார். கடந்த 19 வருடங்களாக இயங்கி வரும் இந்த அரசு சார்பற்ற இயக்கத்தின் வாயிலாக கஷ்டப்படுபவர்களுக்கும் தேவைப்படுபவர்களுக்கும் பல உதவுகளை வழங்கி வந்துள்ளார்.
குமாரி அனு சீலா. Digital Autopsy என்ற ஒரு புதுமையான 3D தடயவியல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். மலேசியாவில் பெண்களின் தொழில்முனைவோர் சங்கம் (NAWEM) வாயிலாக பெண்களுக்கு தொழில்முனைவோர் விழிப்புணர்வை உருவாக்குவதைத் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார்.
திரு டீப் சிங். கடந்த 17 வருடங்களாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோத்தா ராயா பகுதியிலுள்ள வீடுயின்றி வறுமையில் வாழும் ஆதரவற்றவர்களுக்கு வீட்டில் உணவுகளைச் சமைத்து அவர்களுக்கு வழங்கு வருகின்றார். மனைவி திருமதி கரஞ்சித் கவுர், மகன் ஹஷ்விண்டர் சிங் மற்றும் நண்பர் டாக்டர் ஹரிந்தர் ராய் சிங் இவருக்குப் பெரும் உத்வேகமாக இருந்தார்கள்.
இவர்கள் நம் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக பல நற்பணி சேவைகளும் சாதனைகளும் நம்மால் மறக்கலாகாது. இவர்களின் உழைப்பு உன்னதமானது, ஆராய்ச்சி ஆக்கப்பூர்வமானது, சேவை அளப்பறியது, சாதனைகள் காலத்தால் மறையாதது. தன்னிலை உயர்த்திக் கொண்டு சமுதாயத்தையும் உயர்த்திய இவர்கள் நம் நம் நாட்டின் நட்சத்திர சாதனையாளராவர். இவர்களின் சாதனை அடுத்துவரும் இளம் தலைமுறையினர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையட்டும். இந்த சமுதாயத்தின் சிற்பிகளைச் சிறப்பு செய்வதில் ஆஸ்ட்ரோ உறுதுணை பெருமைக் கொள்கிறது.