Astro's International Indian Trade Expo and Deepavali Kondattam returns
20
July
2017

Astro's International Indian Trade Expo and Deepavali Kondattam returns

ஆஸ்ட்ரோவின்  3-வது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2017

ஆஸ்ட்ரோவின் மாபெரும் 3-வது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி எதிர்வரும் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 24-ஆம் தேதி வரை, 4 நாட்களுக்கு ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

இவ்வாண்டு 100-க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் வர்த்தக முகப்புகளில் வருகையாளர்கள் பாரம்பாரிய உடைகள், இனிப்பு பாண்டங்கள், ஆபரணங்கள்,  உணவு வகைகள், தொழில்நுட்பம், காப்புறுதி, இயற்கை வளம், தொலைத்தொடர்பு, சுற்றுலா முகவர்கள் என இன்னும் பலவற்றை இந்நிகழ்ச்சியில் எதிர்பார்க்கலாம்.

இதை குறித்து ஆஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் மூத்த துணைத்தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து கூறுகையில், “கடந்த வருடம் எங்களின் இந்த  அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சியில் ஏறக்குறைய 240,000 பேர் கலந்து கொண்டனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து இவ்வருடமும் அதிகமான பார்வையாளர்களைக் கவரும் வகையில் மீண்டும் 3-வது முறையாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம்”.

“உள்ளூர் மற்றும் வெளியூர் வர்த்தகர்கள் தங்களுடைய வியாபாரத்தை மேன்மேலும் விரிவுப்படுத்தி கொள்ள இவ்வகையான சிறந்த தளத்தை ஏற்படுத்தி தந்துள்ளோம். இணையதளம், தொலைக்காட்சி மற்றும் வானொலி வாயிலாக வணிகர்களுக்கு விளம்பரத்தை ஏற்படுத்தித் தர மிக ஆவலாய் உள்ளது ஆஸ்ட்ரோ. மேலும், அனைத்துலக ரீதியில் வணிகர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் பங்கேற்பதன்வழி உள்ளூர் வணிகர்கள் தங்களின் வியாபாரத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லும் வாய்ப்பும் காத்திருக்கிறது”, என்று அவர் கூறினார்.

தற்போது இருவகையான முகப்புகள் ரிம 5000 முதல் ரிம 20,000 வரை விற்கப்படுகின்றது.

4 நாட்களுக்கு இடம்பெறும் இந்த நிகழ்ச்சியில் ஆடை அலங்காரம், மிமீகிரி போட்டி, கலைஞர்களின் சந்திப்பு, உள்ளூர் கலைஞர்கள் மற்றும் டி.எச்.ஆர் ராகா அறிவிப்பாளர்களின் கலைநிகழ்ச்சிகள் போன்றவை இடம்பெறும்.

அதுமட்டுமின்றி, Astro Circle ஏற்றி நடத்தும் முறுக்கு செய்யும் மற்றும் புதையல் தேடும் போட்டிகளிலில் கலந்து விமான பயணச்சீட்டுகள், எச்.டி தொலைக்காட்சி, Playstation 4 Slim போன்ற பல அரிய பரிசுகளைத் தட்டிச் செல்லும் வாய்ப்புக் காத்துக் கொண்டிருக்கின்றது. அதை வேளையில், Astro Circle முகப்பில் உள்ளூர் கலைஞர்களைச் சந்தித்தல்,  அதிர்ஷ்ட குலுக்கல் அல்லது ஆஸ்ட்ரோ புள்ளிகளை எவ்வாறு மீட்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

மேல்விவரங்களுக்கு www.astroulagam.com அல்லது www.facebook.com/AstroUlagam அகப்பக்கங்களை நாடுங்கள்.

நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்புக் கூட்டதில் “சீட்’ தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ டாக்டர் ஏ.தி. குமரராஜா சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்டார்.