ஆஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் வர்த்தகர்களுக்கு அரிய வாய்ப்புஆஸ்ட்ரோவின் மாபெரும் 5-வது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சியை பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை வேதிகா அக்டோபர் 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் அதிகாரப்பூர்வமாகத் துவங்கி வைத்தார்.அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சி, அக்டோபர் 6-ஆம் தேதி வரை ஜிஎம் கிள்ளான் வாகனம் நிறுத்தும் வளாகத்தில் நடைபெறவுள்ளது. 100-க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் வர்த்தக முகப்புகளுடன் மதியம் 12 முதல் இரவு 11 மணி வரை இடம்பெறும் இந்நிகழ்ச்சிக்குப் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். இந்நிகழ்ச்சிக்கு நுழைவு இலவசமாகும். ஆஸ்ட்ரோ தமிழ் நிகழ்ச்சியின் துணைத் தலைவர் முருகையா வெள்ளை, கூறுகையில், “கடந்த ஆண்டுகளில் கிடைத்த மகத்தான ஆதரவைத் தொடர்ந்து, இவ்வாண்டும் உள்ளூர் மற்றும் சர்வதேச இந்திய வர்த்தகர்கள் தங்களுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான கூடுதல் வாய்ப்புகளை வழங்க முடிவு செய்து இவ்வாண்டும் இந்த இந்திய வர்த்தக விழாவை ஏற்பாடு செய்துள்ளோம்.கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சிக்கு 250,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ள வேளையில், இவ்வாண்டும் இன்னும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்கிறோம்”, என்றார்.வருகையாளர்கள் பாரம்பாரிய உடைகள், இனிப்பு பாண்டங்கள், ஆபரணங்கள், உணவு வகைகள், தொழில்நுட்பம், காப்புறுதி, இயற்கை வளம், தொலைத்தொடர்பு, சுற்றுலா முகவர்கள் என இன்னும் பலவற்றை இவ்வாண்டு இந்நிகழ்ச்சியில் எதிர்பார்க்கலாம்.அதுமட்டுமின்றி, இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்காக நடனப் போட்டி, கோலம் போட்டி, ஆஸ்ட்ரோ வானவில் விருது விழா, ஆடல் பாடல், கேளிக்கை விளையாட்டு, பிரபலங்களின் சந்திப்பு, உள்ளூர் நட்சத்திரங்களின் வருகை, ராகா மற்றும் மண்ணின் மைந்தர்களின் கலைநிகழ்ச்சிகள் என இடம்பெறவுள்ளது.அதை வேளையில், ஆஸ்ட்ரோ விண்மீன் எச்.டி மற்றும் ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசைகளில் இடம்பெறவுள்ள புத்தம் புதிய மற்றும் தீபாவளி சிறப்பு உள்ளடக்கங்களின் அறிமுக விழாவும் இந்நிகழ்ச்சியில் நடைபெறவுள்ளது. மேல் விவரங்களுக்கு www.astroulagam.com அகப்பக்கம் அல்லது www.facebook.com/AstroUlagam முகநூலை வலம் வருங்கள்.