ஆஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழாவில் உள்ளூர் கலைஞர்களின் அசத்தலான படைப்பு
ஆஸ்ட்ரோவின் மாபெரும் 5-வது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் அக்டோபர் 3 -ஆம் தேதி ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் இனிதே தொடங்கியது.
இரவு 7 மணிக்கு ‘இது எங்க beat-u’ கலைநிகழ்ச்சியில், நம்முடைய பிரபல உள்ளூர் இசைக்குழு மற்றும் ஹிப்-ஹாப் கலைஞர்களான Lock-up, டாக்கி, பைரேட் ராஜ், OG டாஸ், Boomerangs, விகடகவி மகேன், பின்னணி பாடகி புனிதா ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கலக்கலான படைப்புகளை வழங்கினர். ‘இது எங்க beat-u’ கலைநிகழ்ச்சியின் நேரலை ஆஸ்ட்ரோ உலகம் முகநூலில் ஒளியேறியது.
அதுமட்டுமின்றி, மதியம் 12 மணிக்கு தொடங்கிய ஆஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழாவில் குழந்தைகளுக்காக ‘மரண மாஸ்’ நடனப் போட்டி, ‘கண்டுப்பிடி பாட்டுப்பாடு’ போட்டி, விளையாட்டுகள், ஆடல் பாடல் என ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி வரை ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் மதியம் 12 மணி முதல் இரவு 11 மணி வரை நடைபெறும். உள்ளூர் மற்றும் வெளியூர் வர்த்தக முகப்புகளில் பாரம்பாரிய உடைகள், இனிப்பு பாண்டங்கள், ஆபரணங்கள் என தீபாவளிக்கான அனைத்து பொருட்களையும் இந்நிகழ்ச்சியில் பெற்று கொள்ளலாம்.