நாடு தழுவிய நிலையில் மார்ச் 7 திரையங்குகளை நாடி வருகிறது `குற்றம் செய்யேல்`
ஆஸ்ட்ரோ வானவில் மற்றும் சினி சத்திரியா நிறுவனம் தயாரிப்பில் நம் உள்ளூர் மற்றும் தமிழ் நாடு கலைஞர்களின் கூட்டணி நடிப்பில் ‘குற்றம் செய்யேல்’ திரைப்படம் எதிர்வரும் மார்ச் 7-ஆம் தேதி மலேசியாவிலுள்ள 50 திரையரங்களில் வெளியிடூ காணவுள்ளது. டாக்டர் செல்வமுத்து தயாரிப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தை தமிழக இயக்குநர் வெங்கடேஷ், மலேசிய இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.
ஆஸ்ட்ரோ இந்திய நிகழ்ச்சிகளின் குழுமத் தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து கூறுகையில், “இன்றைய உள்ளூர் திரைப்படங்கள் இந்தியத் திரைப்படங்களுக்கு நிகராக பல படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2016-ஆம் ஆண்டு ஆஸ்ட்ரோ சினி சத்திரியா நிறுவனத்துடன் இணைந்து பிரபல நடிகர் சக்தி வாசு மற்றும் சமுத்திரகன்னி ‘தற்காப்பு’ திரைப்படத்தை மலேசிய திரையரங்களில் வெளியிட்டோம். அவ்வகையில் இந்தியர்களின் குண்டர் கும்பலை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள ‘குற்றம் செய்யேல்’ மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பைப் பெறும் என்று நம்பிகிறேன்”, என்றார்.
‘குற்றம் செய்யேல்’ திரைப்படம் குண்டர் கும்பல் பற்றிய ஒரு கதையாகும். கல்லூரி மாணவ இளைஞர்கள் சிலருக்கு அக்கல்லூரி நிர்வாகம் இரண்டு பிரிவுகளாக ஆய்வு வேலை ஒன்றை வழங்குகிறது. இதில் ஒரு இளைஞர் குழுவினர் குண்டர் கும்பல் குறித்து ஆய்வு நடத்த செல்கின்றனர். இந்நிலையில் மற்றொரு குழு காவல்துறை குறித்து ஆய்வு நடத்துகின்றனர். இந்த சூழலில் உண்மையான காவல்துறை குண்டர் கும்பலையும் அதன் நடவடிக்கைகளையும் எப்படி கையாண்டு தீர்வு காண்கின்றனர் என்பதுதான் இத்திரைப்படத்திம் கதையாகும்.
இத்திரைப்படத்தில் தமிழக கலைஞர் மெட்டி ஒலி போஸ் வெங்கட், விஜித், கலக்க போவது யாரு தீனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இவர்களுடன் தயாரிப்பாளர் டாக்டர் செல்வமுத்து, பாரதிராஜா, ஷான், சாம், சாரதி, பிரேம், ரவி, நத்ராஜன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
60 நாட்களில் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை இந்திய மட்டுமின்றி நம் நாட்டைச் சேர்ந்த உள்ளூர் படக்குழு இணைந்து பணியாற்றியுள்ளார்கள். அதை ேளையில், இத்திரைப்படத்தில் அர்வின் ராஜ் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். மொத்தம் 3 பாடல்களைக் கொண்ட இத்திரைப்படத்தில் பிபரல பின்னணிப் பாடகர் கானா பாலா பாடியுள்ளார். இத்திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியிட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
‘குற்றம் செய்யேல்’ திரைப்படத்தைக் குறித்த மேல் விவரங்களுக்கு ஆஸ்ட்ரோ உலகத்தின் அதிகாரப்பூர்வ அகப்பக்கமான www.astroulagam.com.my அல்லது www.facebook.com/AstroUlagam முகநூல் அகப்பக்கத்தை நாடுங்கள்.