RAAGA Introduces A Refreshed Announcer Line-Up For Fans
RAAGA Introduces A Refreshed Announcer Line-Up For Fans
01
January
2019

RAAGA Introduces A Refreshed Announcer Line-Up For Fans

புத்தாண்டில் புதுப்பொலிவுடன் ராகா

கோலாலம்பூர், 1 ஜனவரி 2018 – மலேசியாவின் முதல் நிலை தமிழ் வானொலி ராகா, புதுப்பிக்கப்பட்ட தனது அறிவிப்பாளர் வரிசையை இன்று நேரலையாக அறிமுகப்படுத்தியது. அதே வேளையில், `ராகாவின் ஸ்டார் யார் - சீசன் 2` வெற்றியாளரான 23 வயது கோகுலன் இளங்கோவன் ராகா குடும்பத்தின் புதிய அறிவிப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டார்.

இதைக் குறித்து, ராகாவின் தலைவர், சுப்ரமணியம் வீராசாமி கூறுகையில், “சுமார் 1.2 லட்சம் மலேசியர்களைச் சென்றடையும் ராகா, நேயர்கள் நெஞ்சில் தனது முதல் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள ஏதுவாக புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை முன்னிலைப்படுத்தி வருகிறது. அவ்வகையில் புதுப்பிக்கப்பட்ட அறிவிப்பாளர் வரிசையையுடன் புத்தாண்டில் நேயர்களுக்கு மேலும் திருப்திகரமான அனுபவத்தை ராகா கொடுக்கவிருக்கிறது. எங்கள் குடும்பத்தில் ஒருவராக கோகுலனை நாங்கள் மகிழ்வுடன் வரவேற்கிறோம். அவரின் வசீகரமும் நிகழ்ச்சி ஆளுமையும் ராகா நேயர்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் என நம்புகிறோம்".

புதுப்பிக்கப்பட்ட அறிவிப்பாளர் வரிசையில் சுரேஷ் மற்றும் அகிலா, வார நாட்களில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை ராகாவின் கலக்கல் காலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள். இந்நிகழ்ச்சியின் போது நாளிதழ்களில் வெளிவந்த முதல் பக்கத்தின் முக்கியச் செய்திகள், சமூக செல்நெறிகள், விளையாட்டுகள், சமீபத்தில் வெளிவந்த உள்ளூர் மற்றும் வெளியூர் பொழுதுபோக்கு செய்திகள் மற்றும் ‘இது எப்படி இருக்கு’ போன்றவை நேயர்கள் எதிர்பார்க்கலாம்.

ராகாவில் காலை 10 மணி தொடக்கம் மதியம் 1 மணி வரை இடம்பெற்று வந்த ‘ஹலோ நண்பா’ நிகழ்ச்சி ‘வணக்கம் ராகா’ என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது. இந்நிகழ்ச்சியை அறிவிப்பாளர் ரேவதி தொகுத்து வழங்குவார். ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து அதனை இந்நிகழ்ச்சியின் போது ரேவதி நேயர்களுடன் கலந்துரையாடுவார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து மதியம் 1 மணி முதல் 3 மணி வரை ரேவதி ‘இன்னிக்கு என்ன கதை’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குவார். இந்நிகழ்ச்சியில் ‘யார் சரி’, ‘இதுதான் கதையா?’, ‘கண்டுபிடி காப்பி குடி, ‘பிரிந்தோம்... இணைவோம்’, ‘ரசிகர் சாய்ஸ்’ மற்றும் ‘கதை கேளு’ போன்ற புதிய அங்கங்கள் இடம்பெறும்.

மதியம் 3 தொடக்கம் இரவு 7 மணிக்கு வரை இடம்பெறும் ‘ஹப்பார் மாலை’ நிகழ்ச்சியை அறிவிப்பாளர் உதயா தொகுத்து வழங்குவார். இந்நிகழ்ச்சியில் நேயர்கள் அண்மைய செய்திகள், சமூக வலத்தளங்களில் பரவலான பொழுதுபோக்கு தலைப்புகளுடன் மலேசிய கலைஞர்களின் நேர்காணல்களைக் கேட்டு மகிழலாம்.

ராகாவின் குடும்பத்தில் புதியதாக இணைந்துள்ள அறிவிப்பாளர் கோகுலன், இரவு 7 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணி வரை ‘வாங்க பழகலாம்’ எனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார். இந்நிகழ்ச்சியில் ‘இந்த வாரம் பக்கா மாஸ்’, ‘கொஞ்சம் படம் கமிப்போம்’, ‘தல மேல பிரச்சனை’ மற்றும் ‘ராகா டாப் 10’ போன்ற அங்கங்களைக் கேட்கலாம்.

மேல் விவரங்களுக்கு ராகாவின் raaga.fm அதிகாரப்பூர்வ அகப்பக்கம் அல்லது முகநூல் மற்றும் ராகாவுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.