ராகாவின் நடன சூறாவளி : பிரீத்தா மற்றும் லக்ஷித்தா வெற்றி
மலேசியாவிலுள்ள குழந்தைகளின் நடனத் திறமையைக் கண்டறிய கடந்த சனிக்கிழமை 23-ஆம் தேதி சுபாங் மைடின் பேராங்கடியில் நடைபெற்ற ராகாவின் நடன சூறாவளி மாபெறும் இறுதிச் சுற்றில் பிரீத்தா பரமானந்தம் மற்றும் லக்ஷித்தா சத்திய கண்ணன் வெற்றி வாகை சூடினார்கள்.
6 முதல் 8 வயது மற்றும் 9 முதல் 11 வயது என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் சுற்றில் தேர்தெடுக்கப்பட்ட 20 போட்டியாளர்களும் ராகாவின் அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட 15 பாடல்களிலிருந்து ஒரு பாடலை தேர்தெடுத்து அதனைச் சுமார் 2 நிமிடங்களுக்கு நடனமாடினார்கள். பிறகு, அடுத்தச் சுற்றுக்குத் தயாராக போட்டியாளர்களுக்கு என்ன பாடல் என்று மேடையில் வழங்கப்பட்டது.
இரண்டாம் சுற்றின் சவால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாடலில், ஏற்பாடு குழுவினர் அப்பாடலில் குறிப்பிட்ட பகுதியை மட்டுமே ஒலியேற்றினர்கள். அப்பாடலுக்கு போட்டியாளர்கள் 2 நிமிடங்களுக்கு நடனமாட வேண்டும். இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் இரண்டுச் சுற்றிலும் மிகச் சிறப்பாக நடனமாடினார்கள்.
ராகாவின் நடன சூறாவளி இறுதிச் சுற்றின் அறிவிப்பாளர் ஆனந்தா, நடிகர், பாடகர், தொலைக்காட்சி அறிவிப்பாளர் என பன்முகம் கொண்ட டேனிஸ் குமார் மற்றும் ஒடிசி நடனக் கலைஞர் சிவகாமி நடுவர்களாக பணியாற்றினார்கள்.
ஒவ்வொரு பிரிவின் முதல் நிலை வெற்றியாளர்களுக்கு முறையே ரிம 2,000 ரொக்க பரிசு மற்றும் வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. இப்போட்டியில் களமிறங்கிய அனைத்து போட்டியாளர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.