கோலாலம்பூர், ஜனவரி 22, 2017 - ‘யுத்த மேடை ஜூனியர்’ மாபெரும் இறுதிச் சுற்றில் ருத்தீஸ்வரன் முதல் நிலை வெற்றியாளராக வாகை சூடினார். இவர் ரிம 10,000 ரொக்கமும் ரிம 3500 மதிப்புள்ள பரிசுப் பொருட்களும் தட்டிச் சென்றார்.
இம்மாபெரும் இறுதி சுற்றில் ஷாலு நாயர் பரமேஸ்வரன் (10), டார்வினராஜ் (10), தேவிகா வேலு (8), ருத்திரேஸ்வரன்(11), சஞ்சய் முருகன் (9) மற்றும் ரஞ்சித் ராமகிருஷ்ணன் (10) என அறுவர் களமிறங்கினர்.இம்மாபெரும் இறுதி சுற்றில் மூன்று சுற்றிகள் நடைப்பெற்றன. முதல் இரண்டு சுற்றிலும் ஆறு போட்டியாளர்களும் போட்டியிட்டனர். இவ்விரண்டு சுற்றில் ஆறு போட்டியாளர்களும் தங்களுடைய படைப்பபைச் சிறப்பாக வழங்கியிருந்தாலும் இறுதிச் சுற்றான மூன்றாவது சுற்றுக்கு போகும் ருத்தீஸ்வரன் மற்றும் தேவிகாவிற்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது.
சவால் நிறைந்த இந்த மூன்றாம் சுற்றுதான் ‘யுத்த மேடை ஜுனியர்’ போட்டியின் வெற்றியாளரை நிர்ணத்தது. இந்தச் சுற்றில் இருவருமே மிகச் சிறப்பாகத் தங்களது நடனாற்றலை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியின் இறுதியில் ருத்தீஸ்வரன் முதல் நிலை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இரண்டாம் நிலை வெற்றியாளரான தேவிகா ரிம 8,000 ரொக்கமும் ரிம 3000 மதிப்புள்ள பரிசுப் பொருட்களும் தட்டிச் சென்றார். மூன்றாம் நிலை வெற்றியாளரான சஞ்ஜேய்க்கு ரிம 6,000 ரொக்கமும் ரிம 2500 மதிப்புள்ள பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது.இதர போட்டியாளர்களான ஷாலு நாயர் பரமேஸ்வரன் (10), டார்வினராஜ் மற்றும் ரஞ்சித் ராமகிருஷ்ணனிற்கும் முறையே ரிம 4000 மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
இம்மாபெரும் இறுதி சுற்றின் நீதிபதிகளாக பிரபல நடன கலைஞர்களான ராகவ், விக்னேஷ்வரி வடிவழகன் மற்றும் நம் நாட்டின் நடன ஆசிரியரான ரதிமலர் கோவிந்தராஜும் பணியாற்றினர். அறிவிப்பாளர் வேலரசன் மற்றும் நீதா இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.