‘Vallavar’ enters its fourth season with a twist
12
February
2018

‘Vallavar’ enters its fourth season with a twist

12 மலேசிய விளையாட்டு வீரர்கள் களமிறங்கும் வல்லவர் சீசன் 4

கடந்த மூன்று சீசன்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற அஸ்ட்ரோவின் வல்லவர் நிகழ்ச்சி, இவ்வருடம் ‘வல்லவர் சீசன் 4’ கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் மிகவும் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பிப்ரவரி 11-ஆம் தேதி தொடக்கம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அஸ்ட்ரோ விண்மீண் எச்.டி (அலைவரிசை 231), ஆன் டிமாண்ட் மற்றும் அஸ்ட்ரோ கோவில் ஒளியேறவுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட 12 மலேசிய விளையாட்டு வீரர்கள், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோதிக்கும் பல சோதனைகளை இப்போட்டியில் கடந்து வந்து வல்லவர் சீசன் 4 சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் செல்லும் அரிய வாய்ப்புக் காத்துக் கொண்டிருக்கின்றது. 

புதிய அறிவிப்பாளர் நெவாஷன் கணேசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக செந்தில் குமரன் சில்வராஜூ (கராத்தே), ஸ்ரீ ஷர்மினி சேகரன் (கராத்தே), சர்மேந்திரன் ரகுநாதன் (கராத்தே), சஹாருடின் ஜமாலுதின் (கராத்தே), சந்திரலேல்கா சண்முகம் (கூடைப்பந்து), பிரபுதாஸ் கிருஷ்ணன் (தடகளம்), தீபன் கோவிந்தசாமி (MMA), தினகரன் நாயுடு பாப்புநாயுடு (தேக்வண்டோ), கனகராஜ் பாலகிருஷ்ணன் (டென்னிஸ்), ஆனந்தா கிருஷ்ணன் ராஜேந்திரன் (சிலம்பம்), ரிஷிவர்மா சரவணன் (போர்கலை) மற்றும் கோமதி மாரிமுத்து (போர்கலை) ஆகியோர் பங்கெடுக்கின்றார்கள்.

வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணிக்கு அஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), ஆன் டிமாண்ட் மற்றும் அஸ்ட்ரோ கோவில்  தொடர்ந்து 8 வாரங்கள் வல்லவர் சீசன் 4  ஒளிபரப்பாகவுள்ளது.

அஸ்ட்ரோ தமிழ் பிரிவின் துணை இயக்குனர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து, கூறுகையில் “பல சவால்களை தட்டி வல்லவர் நிகழ்ச்சி மூன்று சீசன்களைக் கடந்த தற்போது நான்காவது சீசனை எட்டியுள்ளது. இம்முறையை இந்த சவால்மிகுந்த வல்லவர் களத்தில்  12 மலேசிய விளையாட்டு வீரர்களைக் களமிறக்கியுள்ளோம். இந்நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோதிக்கும் பல சோதனைகளைக் கடந்து வர வேண்டும். இப்போட்டியில் இறுதியில் ஒருவரே வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அதை வேளையில், எங்களின் டிஜிட்டல் வலைத் தளமான அஸ்ட்ரோ உலகத்தில் முதல் முறையாக இந்நிகழ்ச்சியைக் கண்டு களிக்கும் ரசிகர்களுக்காக போட்டி ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம்”, என்றார். 

ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் ஒட்டுமொத்த சவால்களை வென்று சாம்பியன் பட்டத்திற்கு தகுதி பெறும் வல்லவருக்கு முதல் பரிசாக ரிம 50,000 ரொக்கம் வழங்கப்படவுள்ளது. இரண்டாம் நிலை வெற்றியாளருக்கு ரிம 40,000, மூன்றாம் நிலை வெற்றியாளருக்கு ரிம 30,000 மற்றும் ஆறுதல் பரிசாக ரிம 15,000 ரொக்கமும் வழங்கப்படும். இது தவிர்த்து ஒவ்வொரு வாரமும் வல்லவர் போட்டியில் இருந்து தகுதி இழக்கும் போட்டியாளர்களுக்கு ரிம 5,000 ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது.

பிப்ரவரி 11-ஆம் தொடக்கம் ஒவ்வொரு ஞாயிறுதோறும் இரவு 8.00 மணிக்கு அஸ்ட்ரோ விண்மீண் எச்.டி-யில் ஒளிபரப்படும் வல்லவர் நிகழ்ச்சியைக் கண்டு, பின்னர் இந்நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்படும் கேள்விகளைச் சேகரிக்க வேண்டும். பிறகு, அஸ்ட்ரோ  அகப்பக்கத்தை நாடி 8 கேள்விகளின் பதில்களோடு கேட்கப்பட்டிருக்கும் சுலோகத்தையும் பூர்த்திச் செய்ய வேண்டும். ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதிக்குள் பதில்களை அனுப்பி வைக்க வேண்டும். மூன்று அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு Nantha Travel & Tours Sdn. Bhd சுற்றுலா நிறுவனம் வழங்கும் இந்தோனேசியா யோக் ஜாக்கார்த்தா செல்லும் அரிய வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கின்றது.